×

வாரணாசி, ஜம்முவில் கட்டப்படும் ஏழுமலையான் கோயிலுக்கு இடம் தேர்வு செய்ய தீவிரம்: அதிகாரிகள் குழு புறப்பட்டது

திருமலை: வாரணாசி, ஜம்முவில் அமைய உள்ள ஏழுமலையான் கோயிலுக்கான இடம் தேர்வு செய்ய அதிகாரிகள் குழு ஜம்மு புறப்பட்டது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உபி.யில் உள்ள வாரணாசி, ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக அதிகாரிகள் குழுவினர் நேற்று ஜம்மு புறப்பட்டனர். இது பறறி  தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறியதாவது: ஜம்மு, வாரணாசியில் பெருமாள் கோயில் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. . இதேபோன்று புவனேஸ்வர், சென்னை, ஐதராபாத் ஆகிய பகுதிகளிலும் பெருமாள் கோயில் கட்டும் பணி நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரா மாநில அரசின் சார்பில் மும்பையில் கோயில் கட்டுவதற்காக இடம் வழங்கியுள்ளனர். இந்த இடத்தில் 30 கோடியில் கோயில் கட்டப்பட உள்ளது. இதேபோன்று வாரணாசி, ஜம்முவில் கோயில் கட்டுவதற்காக அம்மாநில அரசுகள் இடம் தேர்வு செய்து வழங்கியுள்ளன. ஜம்முவில் 7 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 4 இடங்களை  தேவஸ்தான பொறியாளர்கள், ஸ்தபதி குழு தேர்வு செய்வார்கள். இதற்காக இக்குழு அங்கு புறப்பட்டுள்ளது. இந்தாண்டுக்குள் கோயில் கட்டும் பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மே ஆர்ஜித சேவைகளுக்கு 72,773 முன்பதிவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவைகளுக்கு 72 ஆயிரத்து 773 முன்பதிவு டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், ஆன்லைன் குலுக்கல் ஒதுக்கீட்டுக்கு 11,498 டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டன. இவற்றை பெற பக்தர்கள் ஒரு வாரம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பின்னர், குலுக்கலில்  டிக்கெட் வழங்கப்படும், பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் நேரடியாக முன்பதிவு செய்ய 61,275 டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டன. இவற்றுக்கு  www.ttdsevaonline.com என்ற இணையத்தில் முன்பதிவு செய்யலாம்.

Tags : team ,Ezhumaliyan ,Varanasi ,Jammu ,crew ,temple ,Jammu Venkateswara , Temple of Varanasi, Jammu and Ezumalayan
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை