×

மகளிர் முத்தரப்பு டி20 இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் முத்தரப்பு டி20 தொடரின் லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 123 ரன் குவித்தது. ஸ்மிரிதி மந்தனா 45 ரன் (40 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிகியூஸ் 23, கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 14 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் அன்யா ஷ்ரப்சோல் 3, கேதரின் பிரன்ட் 2, எக்லஸ்டோன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்து வென்றது. நதாலியே ஸ்கிவர் 50 ரன் (38 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஹீதர் நைட் 18, டேனியல் வியாட் 14, பிரான் வில்சன் 20* ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ராஜேஸ்வரி 3, ராதா 1 விக்கெட் வீழ்த்தினர். ஷ்ரப்சோல் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இங்கிலாந்து 3 போட்டியில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. ஆஸ்திரேலியா (2), இந்தியா (2) பின்தங்கியுள்ளன. மெல்போர்னில் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகின்றன.

Tags : England ,tri-series ,women ,T20 India , Women's Trilateral T20, Indian Team, England
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்