×

பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் வங்கதேசம் 233 ரன்னில் சுருண்டது: அப்ரிடி அபார பந்துவீச்சு

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. வங்கதேச தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், சைப் ஹசன் களமிறங்கிறங்கினர். சைப் ஹசன் டக் அவுட்டாகி வெளியேற, தமிம் இக்பால் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். வங்கதேசம் 3 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், நஜ்முல் ஷான்டோ - கேப்டன் மோமினுல் ஹக் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 9 ரன் சேர்த்தது.மோமினுல் 30 ரன், ஷான்டோ 44 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த மகமதுல்லா 25 ரன், லிட்டன் தாஸ் 33 ரன், தைஜுல் அஸ்லாம் 24, ருபெல் உசேன் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் விளையாடிய முகமது மிதுன் அரை சதம் அடித்தார். அவர் 63 ரன் (140 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி நசீம் ஷா வேகத்தில் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் வசம் பிடிபட்டார். அபு ஜாயித் (0) ரன் அவுட்டாகி வெளியேற, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 233 ரன்னுக்கு சுருண்டது (82.5 ஓவர்). பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகீன் ஷா அப்ரிடி 4, அப்பாஸ், ஹரிஸ் சோகைல் தலா 2, நசீம் ஷா 1 விக்கெட் வீழ்த்தினர். 2ம் நாளான இன்று பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடுகிறது.

Tags : Bangladesh ,Test ,Pakistan ,Afridi Bangladesh ,Afridi , Pakistan, First Test, Bangladesh, Afridi
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...