×

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: சீன உதிரி சாதனங்களுக்கு தடை: மற்ற நாடுகளில் இருந்து தருவிக்க சுசுகி மோட்டார் கார்ப் முடிவு

புதுடெல்லி:  கொரோனா தாக்கம் காரணமாக, மோட்டார் வாகன உறுதி பாகங்களை சீனாவில் இறக்குமதி செய்வதை நிறுத்திய சுசுகி மோட்டார் கார்ப் அவற்றை  வேறு நாடுகளில் இருந்து அவற்றை தருவிக்க முடிவெடுத்துள்ளது.
 கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. ஆட்கொல்லி நோயாக கருதப்படுவதால் பல நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சீனாவிலுள்ள தங்கள் நாட்டினரை மீண்டும் அழைத்து ெகாண்டு உரிய சிகிச்சைகளை அளித்து வருகின்றன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சீனாவுடனான வர்த்தகத்தை உலக நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில்,  மோட்டார் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சுசுகி  மோட்டார் கார்ப் உதிரி பாகங்களை சீனாவுடன் வாங்காமல் வேறு நாடுகளில் அவற்றை இறக்குமதி செய்து கொள்வது பரிசீலித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கார் உற்பத்தி பாதிக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.  சீனாவில் அதற்கு கார் தயாரிப்பு ஆலை இல்லை. விற்பனையும் கிடையாது. ஆனால் உதிரிபாகங்களை மட்டும் இறக்குமதி செய்து வருகிறது.
ஜப்பானைச் சேர்ந்த பெரிய நிறுவனங்களில் ஒன்றான சுசுகி மோட்டார் கார்ப் அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் காரணமாக தயாரிப்பில் பாதிப்பு ஏற்படும். அத்துடன் வினியோகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’’ என்றனர்.
இதன் போட்டி நிறுவனமான டெயோட்டா மோட்டார் கார்ப் அதிகாரிகள் கூறுகையில், சீனாவிலுள்ள அனைத்து தயாரிப்பு பிரிவுகளும் வரும் 16ம் ேததி வரை  மூடப்பட்டிருக்கும் என்றார். பியட் கிரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் என்வி அதிகாரிகள் கூறுகையில் ‘‘ சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுக்கப்பட்டு தயாரிப்பு இரு வாரங்களுக்குள் மீண்டும் தொடங்காவிட்டால், ஐரோப்பாவில் உள்ள தயாரிப்பு பிரிவு மூடப்படும்’’ என்றனர்.

‘இதுவரை உலகளவில் கார் தயாரிப்புக்கு பெரியளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், ‘ சீனாவில் தயாரிக்கப்பட்டது’ என்ற முத்திரை கொண்ட உதிரி பாகங்களை வேறு பகுதிகளில் இருந்து தருவிக்கும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக’’ சுசுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஸாகிகோ நாகோவா தெரிவித்தார். ஜப்பானின் நான்காவது மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான சுசுகி கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் அதன் வரிக்கு முந்தைய லாபம் 11 சதவீதம் குறைந்து 51.8 பில்லியன் யென் ஆக உள்ளது. கடந்த 2016ம் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டுக்கு பிறகு இதுவே மிக குறைவாகும்.


Tags : Chinese ,Corona ,countries ,Suzuki Motor Corp , Corona virus, China
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...