×

5 நாள் பயணமாக இந்தியா வந்தார் இலங்கை பிரதமர்

புதுடெல்லி:  இலங்கை பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே சமீபத்தில் பொறுப்பேற்றார். அவர் 5 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவர் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இலங்கையில் தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது, இந்திய கடல் பகுதி பாதுகாப்பு, ராணுவ உறவை மேம்படுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Sri Lanka ,India ,tour ,trip , India, Sri Lanka Prime Minister
× RELATED இலங்கையில் முதல் பலி