×

காலை 8 முதல் மாலை 6 மணி வரை டெல்லி சட்டசபைக்கு இன்று வாக்குப் பதிவு : 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி:  டெல்லி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் பதவிக்காலம் வரும் 22ம் தேதியுடன் முடிகிறது. இதனால், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, இம்மாநிலத்தில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசார்,  துணை ராணுவப் படையினர் என 40 ஆயிரம் பேர்  குவிக்கப்பட்டு உள்ளனர்.  இத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில் பெண் வேட்பாளர்கள் 79 பேர். ஆண் வேட்பாளர்கள் 593 பேர். 2 கோடியே 1 லட்சத்து 43 ஆயிரத்து 686 வாக்காளர்கள் வாக்களிக்க உ?ள்ளனர். 13,750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆளும் ஆம் ஆத்மி. 70 தொகுதியிலும் தனித்து களம் காண்கிறது. பாஜ 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள்   4 இடங்களிலும், காங்கிரசும் 66 இடங்களிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணி கட்சியான லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களில் நிற்கிறது. இன்று பதிவாகும் வாக்குகள் 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.

Tags : Voting ,Delhi Assembly , Delhi assembly, voter registration, vote counting
× RELATED கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு...