×

மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு: இன்று முதல் அமலுக்கு வந்தது

சென்னை: டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது. ரூ.40 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில், ‘டாஸ்மாக்’ நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 31 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாக கடந்த சட்டமன்ற தேர்தல் போது தேர்தல் போது வாக்குறுதி அளித்தார். இதன்படி 1,000 ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டன. நேரமும் குறைக்கப்பட்டது. எனினும், ‘டாஸ்மாக்’ விற்பனை தொடர்ந்து உச்சத்தில் இருந்துவருகிறது. தமிழகத்தில் தற்போது 5,152 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. மேலும் 1872 கடைகள் பாருடன் இணைந்து செயல்பட்டுவருகிறது.

இந்த கடைகள் விற்பனைக்கு ஏற்றவாறு ஏ,பி,சி என தரம் பிரிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து அயல்நாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் 165 எப்எல் வகை கடைகளும் செயல்பட்டுவருகிறது. சாதாரண நாட்களில் ரூ.80 முதல் ரூ.90 கோடி வரையிலும் விழா நாட்களில் ரூ.120 முதல் ரூ.180 கோடி வரையிலும் மது விற்பனை நடைபெறுகிறது. 2018-19 ல் டாஸ்மாக் நிறுவனத்திற்கு ரூ. 31157.83 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மாதம்தோறும் சராசரியாக, 50 லட்சம் பெட்டி மது வகைகளும், 20 லட்சம் பெட்டி பீர் வகைகளும் விற்பனையாகின்றன. 2017-18ல் ரூ. 26797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2017-18ம் ஆண்டை காட்டிலும் 2018-19ம் ஆண்டிற்கான டாஸ்மாக் வருவாய் ரூ. 4359.87 கோடி அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் மதுபான விலையை உயர்வை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக கடந்த 4ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன்பிறகு டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது. 180 மில்லி அளவு கொண்ட குவார்ட்டர், ரம், விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்ற மது வகைகளின் விலை ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆப் விலை ரூ.20, புல் பாட்டில் விலை ரூ.40 அதிகரித்துள்ளது. பீர் விலையும் ரூ. 10 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : tasmac
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...