×

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்: 4 அடி உயர வாலிபரை கரம் பிடித்த பெண்

கரூர்: பேஸ்புக்கில் காதலித்து 4 அடி உயரம் கொண்ட வாலிபரை பார்மசி படித்த பெண் திருமணம் செய்து கொண்டார். பின்னர் பாதுகாப்பு கேட்டு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமண ஜோடி தஞ்சமடைந்தது. கரூர் அருகே உள்ள தெரூரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (25). 4 அடி உயரமுள்ள இவர் பிஎஸ்சி, ஐடி படித்து விட்டு ஆன்லைனில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பேஸ்புக்கில் சிவகங்கையை சேர்ந்த பார்மசி படித்துள்ள பவித்ரா என்ற பெண் பழக்கமானார்.

இவர்களது பழக்கம் நாளடைவில் காதலமாக மாறியது. இதையடுத்து 3 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு இருவீட்டார் தரப்பிலும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கரூர் ஈஸ்வரன் கோயிலில் பவித்ராவை விக்னேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் பாதுகாப்பு கேட்டு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சமடைந்துள்ளது.

Tags : facebook
× RELATED ஹீரோவுடன் யாஷிகா காதலா?