×

மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவிற்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்

சென்னை : தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் சேவையாற்றி வந்த லட்சுமி நரசிம்மன், அண்மையில் 7 நாட்கள் நடந்த மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்களில் முக்கியமானவர். மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வந்த அவர் திடீர் மாரடைப்பால் மறைந்திருப்பதற்கு அதிமுக அரசே முழுக் காரணம் என்பது வேதனை அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



Tags : Lakshmi Narasimman Stalin ,Doctors ,Doctors' Association ,President ,Lakshmi Narasimman , Dr., Lakshmi Narasimhan, Mgt. Stalin, condolences
× RELATED நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்...