×

திருவாரூரில் விளைநிலங்களில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு: தேங்கி நின்ற கச்சா எண்ணெயால் ஒரு ஏக்கர் விளைநிலம் முழுவதும் நாசம்

திருவாரூர்:  திருவாரூர் மூலங்குடி கிராமத்தில், ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில்  ஓ.என்.ஜி.சி குழாய் அமைத்து, கடந்த 50 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக விவசாய நிலங்களுக்கு அடியில் ஓ.என்.ஜி.சி குழாயானது பதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மூலங்குடி கிராமத்தில் பன்னீர்செல்வம் என்ற விவசாயிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விளைநிலத்தில் உளுந்து பயிர்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்விளைநிலத்தின் வழியேதான் ஓ.என்.ஜி.சி குழாய் செல்கிறது. தற்போது, குழாய் திடீரென உடைந்து, விளைநிலம் முழுவதும் கச்சா எண்ணெய் பரவியுள்ளது. இதனால், உளுந்து சாகுபடி முழுவதும் அழிந்த நிலையில் உள்ளது. மேலும் 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு இந்நிலத்தில் விவசாயம் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்தார்.

தொடர்ந்து, விவசாயி, ஓ.என்.ஜி.சி நிறுவனம் உடனடியாக இங்கு வந்து ஆய்வு நடத்தி, உரிய நிவாரணம் வழங்கவேண்டும், மற்றும் இப்பகுதியில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி குழாய்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். மேலும் விவசாயி, ஆண்டுதோறும் இதுபோன்ற பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது, அதனால் உரிய தீர்வு கிடைக்கும் வரை கச்சா எண்ணையை அகற்றவிடமாட்டோம் என விளைநிலத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் விவசாய நிலத்திற்கு வந்த 10க்கும் மேற்பட்ட ஓ.என்.ஜி.சி நிறுவன அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது, பன்னீர்செல்வம் தனது நிலத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும், இல்லையெனில் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவதாக தெரிவித்தார்.

Tags : ONGC ,Thiruvarur , Thiruvarur, farmland, ONGC, pipeline, breakage, crude oil, sabotage
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்