×

தனியார்மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி புதிய ரயில் பாதை திட்டங்களை கைவிட திட்டம்

மன்னார்குடி: தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில், மொத்தம் ரூ.2876 கோடியே 56 லட்சத்து 73 ஆயிரம் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கமாலி - சபரிமலை, திருநின்னவயா- குருவாயூர் புதிய பாதை திட்டங்கள் கேரளாவிலும், 9 புதிய பாதை திட்டங்கள் தமிழகத்திலும் நடந்து வருகின்றன. ராமேஷ்வரம் - தனுஷ்கோடி (17 கி.மீ) புதிய பாதை திட்டத்திற்கு மட்டும் ரூ.2 கோடியே70 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. 8 தமிழக புதியபாதை திட்டங் களுக்கும், இரண்டு கேரள திட்டங்களுக்கும் தலா ரூ. ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய பாதை திட்டங்களை பொருத்தவரை ரூ.2 கோடி யே 70 லட்சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு.

இரட்டை, மூன்று மற்றும் நான்கு வழி பாதை திட்டங்களுக்கு கூடுதல் நிதி கிடைத்து உள்ளது. மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி இரட்டை வழித்திட்டத்திற்கு ரூ.367 கோடி, மணியாச்சி - நாகர்கோயில் இரட்டை வழிக்கு ரூ345 கோடி, திருவனந்தபுரம்- கன்னியாகுமரி இரட்டை வழிக்கு ரூ133 கோடியே 50 லட்சம், ஓமலூர்-மேட்டூர் டேம் மின்மய இரட்டைப்பாதைக்கு ரூ. 56 கோடி யே 85 லட்சம், சேலம் -ஓமலூர் இரட்டைப் பாதைக்கு ரூ.22 கோடி, செங்கல் பட்டு- தாம்பரம் மூன்றாவது பாதைக்கு ரூ.132 கோடி என மொத்தம் ரூ.1181 கோடி இத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. ஐந்து ஆகலப்பாதை திட்டங்கள் நடந்து வருகின்றன. அதில் இரண்டு முடிவடைய இருக்கின்றன. மீதமுள்ள மூன்றில் இரண்டு டெல்டா மாவட்ட திட்ட ங்கள். பட்டுக்கோட்டை- மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் புதியபாதைகள் அடங்கிய மயிலாடுதுறை- காரைக்குடி அகலப்பாதை திட்டம். இதற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி வழி திருக்குவளை திட்டம் இது திருச்சி- காரைக்கால் அகலப்பாதையில் வரும் டெல்டா மாவட்ட திட்டம். இதற்கு ரூ. ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை- போடி நாயக்கனூர் அகலப் பாதை திட்டத்திற்கு ரூ.75 கோடியே 18 லட்சம், ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக அகலப்பாதை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.175 கோடியே 18 லட்சத்து 3 ஆயிரம். இது தவிர சாலை பாதுகாப்பு பணி மற்றும் ரயில்வே கேட்டுகள் பணிகளுக்கு ரூ.102 கோடியே 35 லட்சத்து 98 ஆயிரம் ஓதுக்கப்பட்டு உள்ளது. மேம்பாலம் மற்றும் கீழ் பாலங்கள் கட்ட ரூ.460 கோடியே 50 லட்சம் தண்ட வாளங்கள் புதுப்பிக்க ரூ.730 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இரட்டை வழி திட்டங்கள், மேம்பாலங்கள் கீழ் பாலங்கள் பணி மற்றும் தண்டவாளங்கள் புதுப்பிக்க கூடுதல் நிதி தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டு இருந்தாலும் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி நீங்கலான பத்து புதிய பாதை திட்டங்களுக்கு தலா ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதும், அகலப்பாதை பணியில் இடம்பெறும் நாகப் பட்டினம் -திருத்துறைப்பூண்டி திருக்குவளை வழி திட்டம் 100 சதவீதம் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு 60 சதவீத பணிகள் நிறைவடைந்த திட்டத்திற்கும், ஓரளவு பணி முடிவடைந்த திண்டிவனம்- நகரி , திண்டிவனம் - திருவண்ணமலை திட்டங்களுக்கும் தலா ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதும் ஏற்புடையது அல்ல. ரயில்வே தனியார் மய நோக் கத்திற்காக புதிய பாதை திட்டங்களை அரசு கைவிடுவது வெளிப்படையாக தெரிகிறது. இவ்வாறு மனோகரன் கூறினார்.

Tags : Part of the process of privatization Plan to drop new rail line projects
× RELATED பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத...