×

அடிக்கடி பழுதாகும் 108 ஆம்புலன்ஸ் உயிர்தப்பிய கர்ப்பிணி

பந்தலூர்: பந்தலூர் பகுதியில் நோயாளிகளை ஏற்றிச்செல்லும் 108 ஆம்புலன்ஸ்  அடிக்கடி பழுதாவதால் நோயாளிகள் பாதிப்படைகின்றனர். பந்தலூர்  பகுதியில் ஏழை, எளிய தோட்டத் தொழிலாளர்கள், அன்றாட கூலிகள் அதிகளவில்  வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளுக்கு  சென்று அவசர சிகிச்சை பெறுவதற்கு 108 ஆம்புலன்சை மிகவும்  நம்பியுள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி பழுதாவதால் பாதிப்பு  ஏற்படுகிறது.
நேற்று அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தில் இருந்த மாங்கோடு பகுதியை சேர்ந்த லீலா (24) என்பவருக்கு பிரசவ  வலி ஏற்பட்டது.

இதையடுத்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம்  அவரை ஏற்றிச்சென்றனர். ஆம்புலன்ஸ் பந்தலூர் அருகே உள்ள தேவகிரி பக்கம் சென்றபோது டயர்  கட்டாகி சாலையிலேயே நின்றது. டிரைவரின்  சாமர்த்தியத்தால் அருகே இருந்த பள்ளத்திற்குள் ஆம்புலன்ஸ் செல்லாமல்  நிறுத்தப்பட்டது. இதனால் கர்ப்பிணி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.   அதன்பின் பந்தலூர் அரசு  மருத்துவமனை 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கூடலூருக்கு கர்்ப்பிணியை கொண்டு  சென்றனர். ஆம்புலன்ஸ் அடிக்கடி பழுதாகி நிற்பதால்  உயிருக்கு உத்தரவாதம்  இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனவே,  மலைப்பகுதியில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களை உரிய முறையில் பராமரிப்பு  செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : ambulance survivors ,breakdown , 108 ambulances are frequent The survivor is pregnant
× RELATED ‘அதிமுக-பாஜ கூட்டணி முறிவு காதலர்களின் தற்காலிக பிரிவு’