×

கியா மோட்டார்ஸ் ஆலை தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்வதாக பரவியது தவறான தகவல்: ஆந்திர அரசு திட்டவட்டமாக மறுப்பு

அமராவதி: தமிழ்நாட்டில் அமைய வேண்டிய கியா கார் தொழிற்சாலை லஞ்சம், ஊழல் காரணமாக ஆந்திவாவுக்கு சென்றது அம்பலமாகியுள்ளது. தென் கொரியாவின் முன்னனி ஆட்டோ மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான கியா மோட்டார்ஸ், ஆந்திர மாநிலம் அனந்தபூரில் கார் தயாரிப்பு ஆலையை நிறுவியுள்ளது. முதலில் இந்த ஆலை, தமிழகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், ஆலையை நிறுவ கியா மோட்டார்ஸ் சென்னை அருகே இடத்தை தேர்வு செய்தது. அப்போது, அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பல கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனால் அதிர்ந்து போன கியா நிறுவனம், வரிச்சலுகையை வாரி வழங்கிய ஆந்திர மாநிலத்தில் தனது ஆலையை நிறுவிக்கொண்டது.

இந்த நிலையில், கியா நிறுவனம் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்வதாக செய்தி வெளியானது. ஆனால் இதனை ஆந்திர அரசு திட்டவமாக மறுத்துள்ளது. ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் தொழிற்சாலையை தொடங்கிய கியா நிறுவனத்துக்கு தற்போதைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு கடும் நெருக்கடியை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஆந்திராவில் உள்ள ஆலையை தமிழகத்திற்கு மாற்ற அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தமிழகத்திற்கு வந்தால் அதிக லஞ்சம் தர வேண்டியிருக்கும் என்பதால் ஆலையை மாற்றும் முயற்சியை கியா நிறுவனம் கைவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, ஆந்திராவில் இருந்து வெளியேறுவதாக வந்த செய்தியை கியா மோட்டார்ஸ் நிறுவனமும் மறுத்துள்ளது.


Tags : spread ,plant ,Kia Motors ,Tamil Nadu ,Andhra Pradesh , Kia Motors, Plant, Tamil Nadu, Andhra Pradesh
× RELATED கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்