×

200 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் பிரணாஷ் என்ற புதிய ஏவுகணையை தயாரிக்கிறது இந்தியா

புதுடெல்லி: 200 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் பிரணாஷ் என்ற புதிய ஏவுகணையை இந்தியா தயாரிக்கவுள்ளது. மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO பிரஹார் என்ற, 150 கிலோமீட்டர் தூர இலக்கினை தாக்கி அழிக்கும் ஏவுகணையை தயாரித்தது. அதே ரகத்தில் இன்னும் அதிக தொலைவிற்கு சென்று தாக்கும் ஏவுகணை வேண்டும் என்ற ராணுவத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், பிரணாஷ் என்ற புதிய ஏவுகணையை DRDO தயாரிக்கிறது. தரையிலிருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையாக பிரணாஷ் உருவாகியது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டு சோதனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லாது, என்பதோடு, திட எரிபொருளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும். அணு ஆயுதங்களை சுமந்து செல்வதற்கு பிரிதிவி வரிசை ஏவுகணைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரிதிவி ஏவுகணைகள் 150 முதல் 350 கிமீ வரை அணுசக்தி திறன் கொண்டவை மற்றும் அதன் வரம்புகளைக் கொண்ட ஒரு திரவ உந்துவிசை இயந்திரத்தால் இயக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து, பிராணாஷ் ஏவுகணையை உருவாக்கியதும் நட்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்று அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இது உலகின் மலிவான ஏவுகணைகளில் ஒன்றாக இருக்கும். மேலும், பிரணாஷ் ஏவுகணை,  ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஆட்சியின் எல்லைக்கு வெளியே உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Tags : India ,Pranash , 200 km Distance, Enemy Target, Destroyer, Pranash, Missile, India
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...