×

5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ராஜபக்சே

புதுடெல்லி: இலங்கை பிரதமர் ராஜபக்சே, 5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். ஐந்து நாள் பயணத்தில் பாதுகாப்பு, வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற விஷயங்கள் குறித்து, அவர் பேச்சு நடத்த உள்ளார். இலங்கையில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், கோத்தபயா வெற்றி பெற்றார். இதையடுத்து, அவரது மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான மஹிந்த ராஜபக்சே, பிரதமராக பதவியேற்றார். அதிபராக பதவியேற்ற கோத்தபயா, தன் முதல் வெளிநாட்டு பயணமாக, நவம்பரில் இந்தியா வந்தார். அப்போது, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் அரசுமுறை பயணமாக இன்று ராஜபக்சே இந்தியா வருகிறார். டெல்லியில் அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின் அவர் வாரணாசி, சாரநாத், புத்த கயா, திருப்பதிக்கு செல்கிறார். அடுத்த மாதம் 11ம் தேதி வரை அவர் இந்தியாவில் இருக்கிறார்.


Tags : Rajapaksa ,Sri Lanka ,India ,state visit ,visit , Prime Minister of Sri Lanka, Rajapaksa, Diplomacy, India, Sri Lanka, Prime Minister Modi
× RELATED இலங்கையில் சிக்கியுள்ள 2,000 இந்தியர்களை...