×

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய விவகாரம் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் செனட் சபையில் தோல்வி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம், செனட் சபையில் தோல்வி அடைந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் அதிபரின் பதவி நீக்க தீர்மானம் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான ஜனநாயக கட்சிக்கு இங்கு பலம் அதிகம். இதையடுத்து செனட் சபையில் தீர்மானம் மீதான விசாரணை நடைபெற்றது. இதன் முடிவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் தோல்வியடைந்தது. செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்களும், ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்களும் உள்ளனர். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் டிரம்புக்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும் எதிராக 48 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில், அதிபருக்கு ஆதரவாக 53 பேரும், எதிராக 47 பேரும் வாக்களித்திருந்தனர்.

குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டரும், 2012ம் ஆண்டின் கட்சியின் அதிபர் வேட்பாளருமான மிட் ரோம்னே முதல் குற்றச்சாட்டில் அதிபருக்கு எதிராகவும், இரண்டாவது குற்றச்சாட்டில் அதிபருக்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தார். டிரம்ப்புக்கு ஆதரவாக அதிக உறுப்பினர்கள் வாக்களித்ததால் டிரம்ப் பதவிநீக்க தீர்மானம் செனட் சபையில் தோல்வியடைந்தது. இதன் காரணமாக 2 புகாரில் இருந்தும் அதிபர் டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிபரின் பதவி பறிபோகாமல் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தல் வரை டிரம்ப் பதவியில் நீடிப்பார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த காலங்களில் ஜனநாயக கட்சியின் அவமானகரமான நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்து, 2020 மற்றும் அதற்கு பின்னரான மக்கள் பணிகளில் கவனம் செலுத்த அதிபர் முடிவு செய்துள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சூழல் கவலைதருகிறது
அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் தற்போது நிலவி வரும் மத சுதந்திர சூழலானது கவலையளிக்கிறது. வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் இந்திய தூதரை சந்தித்து இது குறித்து நான் கவலை தெரிவித்தேன். இதில் சில பிரச்னைகளில் இந்தியாவுக்கு உதவவும், அதனுடன் இணைந்து பணியாற்றவும் விரு்ப்பம் கொண்டுள்ேளாம். பெரும்பாலான இடங்களில் இதற்கான முதல் படியானது இந்த விவகாரத்தில் உங்களுக்கு உதவுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என கேட்பதாகவே உள்ளது” என்றார்.

Tags : Senate ,acquisition ,impeachment trial , power Trump, dismissal ,resolution , Senate
× RELATED இளம் தலைமுறையை பாதிப்பதால் அனைத்து...