×

சிரியாவில் இஸ்ரேல் விமான தாக்குதல் 12 போராளிகள் பலி

பெய்ரூட்: சிரியாவில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஈரான் ஆதரவு போராளிகள் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். சிரியாவில் கடந்த 2011 முதல் உள்நாட்டு கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. சிரியா -  இஸ்ரேல் இடையே நடைபெறும் இந்த சண்டையில், சிரியா ராணுவம் மற்றும்  அரசுக்கு ஆதரவான ஈரானிய போராளிகளைக் குறிவைத்து இஸ்ரேல் அடிக்கடி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிரியாவின் கிஸ்வா பகுதியில் நேற்று அதிகாலை இஸ்ரேல் திடீரென விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதேபோல், டாரா மாகாணத்தின் எஸ்ரா பகுதியிலும் விமானம் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் டமாஸ்கஸ் பகுதியில் ஈரான் ஆதரவு போராளிகள் 7 பேர் ெகால்லப்பட்டனர்.  டாரா பகுதியில் ஈரான் ஆதரவு குழுவை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 12 ேபர் கொல்லப்பட்டனர்.  இதற்கிடையே, ஜெருசலேமில் நேற்று தீவிரவாதிகள் காரை கொண்டு மோதி நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 14 பேர் காயம் அடைந்தனர்.


Tags : air strike ,Israeli ,militants ,Syria ,Israel ,air attack , Israel, Syria Air attack
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...