×

கார்பன் வெளியேற்றத்தை தடுக்க 5 ஆண்டுகளில் ரயில்வே 100% மின்மயமாக்கப்படும்: பியூஷ் கோயல் பேச்சு

புதுடெல்லி : எட்டாவது உலக எரிசக்தி கொள்கை உச்ச மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: இந்திய ரயில்வே மின்மயமாக்கலை நோக்கி அதி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது ரயில்வே துறை 55 சதவீதம் மின்மயமாக்கப்பட்டு உள்ளது. அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் அனைத்து பிரிவுகளும் நூறு சதவீதம் மின்மயமாக்கப்பட உள்ளது. பின்னர், உலகின் மிகப் பெரிய மின்மயமாக்கப்பட்ட ரயில்வேயாக இந்திய ரயில்வே திகழும். எரிசக்தி துறையில் முதலீட்டை அதிகரிக்க செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிலக்கரியினால் காற்று மாசுபடுவதை தடுக்க, கடந்த 6 ஆண்டுகளில் புதிய அனல் மின்நிலையங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்படவில்லை. எல்இடி பல்புகளுக்கு மாறியதன் மூலம், ஆண்டுக்கு 8 கோடி டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, வீடுகளில் விறகு, அடுப்புக்கரி கொண்டு சமைப்பது தவிர்க்கப்பட்டு சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுவதன் மூலமும் காற்று மாசுபடுதலும் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுதலும் கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு புதிய காரும் மின்சார வாகனமாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவாக உள்ளது என்றார்.

புல்லட் ரயிலுக்கு 5,600 கோடி
மத்திய பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றிய விவரங்கள் இடம்பெறும் ‘பிங் புக்’ என்றழைக்கப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் உள்ள விவரத்தின்படி மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்துக்கு 2020-21 நிதியாண்டில் 5,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த திட்டம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய இந்த நிதியை ஒதுக்கியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமாக கருதப்படும் மும்பை-புனே இடையேயான புல்லட் ரயில் திட்டம் கருதப்படுகிறது.


Tags : Goyal , Carbon, Railway, Push Goyal
× RELATED சாலையை அடைத்து கூடாரம் அரியானா அமைச்சருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்