×

பிரபல பாடகர் ஜேசுதாசின் தம்பி மர்ம சாவு

திருவனந்தபுரம்: பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாசின் தம்பி கே.ஜே.ஜஸ்டின் கொச்சியில் மர்மமான முறையில் ஏரியில் இறந்து கிடந்தார். பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாசின் தம்பி கே.ஜே.ஜஸ்டின் (62). இவரது மனைவி ஜிஜி. இவரது மூத்த மகன் கடந்த சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். இரண்டாவது மகன் பிளஸ் 2 படித்து வருகிறார். ஜஸ்டினும் ஜிஜியும் கடந்த சில ஆண்டுகளாக பல நோய்களால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஜஸ்டின் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் ஜஸ்டின் வெளியே சென்றுள்ளார். அவர் வீடு திரும்பாததால் அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார்.  நேற்று முன்தினம் வல்லார்பாடம் சரக்கு முனையம் அருகே உள்ள ஏரியில் கிடந்த அடையாளம் தெரியாத உடல் ஜஸ்டினுடையது என்று தெரியவந்தது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,Mysterious Death Jesudas ,singer , Famous singer, brother of Jesudas, death
× RELATED கொரோனாவால் இறந்தவர்கள் சடலம் ஒரே...