×

2030ல் உலகின் பொருளாதார பலமிக்க மூன்று முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்: ராஜ்நாத் சிங் பேச்சு

லக்னோ: உபி தலைநகர் லக்னோவில் 11வது ராணுவக் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. 2வது நாளான நேற்று நடந்த கருத்தரங்கில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:  வரும் 2030ம் ஆண்டில் உலகின் மூன்று முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாகும். இதில், உபி.க்கு முக்கிய பங்கு உள்ளது. 2024ல் இந்தியாவை ₹5 லட்சம் கோடி பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.  பொருளாதார மந்தநிலையிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு காலாண்டில் சரிவு ஏற்படுவது குறித்து கவலைப்பட தேவையில்லை. உலக வங்கி இந்தியாவின் பொருளாதாரம் நன்றாக இருப்பதாக கணித்துள்ளது. அப்படியானால், ₹5 லட்சம் கோடி பொருளாதாரம் சாத்தியமே என்றார்.

Tags : one ,Rajnath Singh ,India ,countries ,world , Economy, Countries, India, Rajnath Singh
× RELATED “தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த...