×

பிக் பாஷ் டி20 லீக்பைனலில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்

மெல்போர்ன்: பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட மெல்போர்ன் ஸ்டார்ஸ் தகுதிப் பெற்றுள்ளது. மெல்போர்னில் நேற்று நடைப்பெற்ற  சேலஞ்சர் சுற்றில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின.  டாஸ் வென்று முதலில் களம் கண்ட மெல்போர்ன் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்தது. அந்த அணியின்   மார்கஸ் ஸ்டோய்னிஸ் 83, நிக் மாடின்சன் 11, நிக் லார்கின் 83*, கிளென் மேக்ஸ்வெல் 4* ரன் எடுத்தனர். சிட்னி அணியின் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட் எடுத்தார். அடுத்து  களம் கண்ட சிட்னி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன் மட்டுமே எடுத்து 28 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் ரோஸ் 58, அர்ஜூன் நாயர் 30 ரன் எடுத்தனர். மெல்ேபார்ன் அணியின் ஹரிஸ் ரவுப் 3, நாதன் கொல்டர் நைல், ஆடம் ஸம்பா தலா 2 விக்கெட் எடுத்தனர். நிக் லார்கின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் மெல்ேபார்ன் ஸ்டார்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது. சிட்னியில் நாளை நடைபெறும் இறுதிபோட்டியில்  சிட்னி சிக்சர்ஸ்-மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதுகின்றன.


Tags : Melbourne Stars ,Big Bash T20 League Final , Big Bash T20, Melbourne, Stars
× RELATED ஸ்டாய்னிஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி