×

நடிகர் ரஜினிக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

சென்னை: சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை கொச்சைப்படுத்துவதா என்று நடிகர் ரஜினிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கொச்சைப்படுத்தி, போராட்டத்தை திசைதிருப்பும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகள் கண்டிக்கத்தக்கது. மக்களின் போராட்டங்களை சமூக விரோதமாகவும், வன்முறையாகவும் சித்தரித்தும், நியாயமான போராட்டங்களை ஒடுக்கும் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை நியாயப்படுத்தியும், சமூக நீதிக்கான அடையாளமாக இருக்கும் தமிழக தலைவர்கள் மீது அவதூறு பரப்பியும் சமீப காலமாக பேசி வரும் ரஜினிகாந்த் பாஜவின் ஊதுகுழலாகவே செயல்பட்டு வருகின்றார். போராட்டங்களை கொச்சைப்படுத்தி அதனை திசைதிருப்பும் போக்கை மேற்கொள்ளும் ரஜினிகாந்த் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Rajini SDPI ,SDPI , Actor Rajini, SDBI
× RELATED மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க SDPI கட்சி முடிவு