8ம் வகுப்பு தேர்வுக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

சென்னை:  எட்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் தேர்வு நடக்கிறது. தனித் தேர்வர்களாக இந்த தேர்வை எழுத உள்ள மாணவர்கள் ஜனவரி 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த தேதியில் விண்ணப்பிக்காதவர்கள் தற்போது தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1ம் தேதியில் பன்னிரெண்டரை வயது நிரம்பிய தனித் தேர்வர்கள் 10ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் அந்தந்த சேவை மையங்களில் நேரடியாக சென்று ஆன்லைன் மூலம் பதிவு ெசய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் 125, சிறப்பு கட்டணம் 500, ஆன்லைன் சேவை கட்டணம் 50, ஆகியவை சேவை மையத்தில் நேரடியாக செலுத்த வேண்டும். முதல் முறையாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதுவோர் தாங்கள் இறுதியாக படித்த பள்ளியில் பெற்ற அசல் மாற்றுச் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் படிக்காதவர்கள் தங்களின் பிறப்பு சான்றை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் அந்த பாடத்தில் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் போது, மாற்றுச் சான்று, அல்லது பிறப்பு சான்று இவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் சான்றின் நகல்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

Related Stories: