×

சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவராக தேவி பதவியேற்க தடை விதித்து ஆட்சியர் உத்தரவு

சிவகங்கை: சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவராக தேவி பதவியேற்க தடை விதிப்பதாக ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தேவியின் எதிர்மனுதாரர் பிரியதர்ஷினி மேல்முறையீடு செய்ததால் தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் பிரியதர்ஷினி தொடர்ந்த வழக்கில் உத்தரவு வரும்வரை தேவி பதவியேற்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சங்கராபுரம் உள்ளாட்சி தேர்தலில் முதலில் தேவி வெற்றி பெற்றது செல்லும் என உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்தது.

Tags : Collector ,Devi ,Sankarapuram Panchayat Council ,Sankarapuram , Sankarapuram
× RELATED குரூப்-1ல் தேர்ச்சி பெற்ற 90 டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணை