×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அனைவரையும் கவர்ந்த திருப்பூர் ஆடைகள்

ஜெர்மனி:  அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பந்தெடுத்துகொடுக்கும் பணியில், சிறுவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தனர். நெகிழிப்  பாட்டில்களை மறுசுழற்சி செய்யப்பட்டு, அந்த வண்ண ஆடைகள் திருப்பூரிலிருந்து தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. ஆயத்த ஆடைகளில் புகழ்பெற்றது தமிழகத்தின் திருப்பூர் நகரம். இங்கிருந்து சர்வதேச நாடுகள் பலவற்றிற்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், திருப்பூர் என்.சி.ஜான்அண்டுசன்ஸ் பின்னலாடை நிறுவனத்திற்கு, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியாளர்களிடமிருந்து ஆடர் வந்தது. அதன்பேரில் நடுவர்கள், பந்தெடுத்துகொடுக்கும் சிறுவர்கள், போட்டியின் ஏற்பாட்டாளர்கள்  உள்ளிட்டோருக்கான ஆடைகளை இந்த நிறுவனம் தயாரித்து அனுப்பியுள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெரியப்படுகின்ற நெகிழிப் பாட்டில்களை மறுசுழற்சிசெய்து, அதிலிருந்து கிடைத்த நூலிழைகளை கொண்டு இந்த ஆடைகள் தயாரிக்கப்பட்டிருப்பது இவற்றின் கூடுதல் சிறப்பாகும். நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சிசெய்து  25 ஆயிரம் ஆடைகள் தயாரித்ததன்மூலம் சுமார் 2 லட்சம் நெகிழிப்  பாட்டில்கள் மண்ணில் புதைந்து இயற்கையை மாசுபடுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களை கவர்ந்தது வீரர், வீராங்கனைகளை  மட்டுமல்ல, பந்தெடுக்கும் பணியில் இருந்த சிறுவர்கள் அணிந்திருந்த வண்ண ஆடைகளும்தான். உலகின் மிகவும் பிரபலமான டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபனில் தமிழக வீரர்கள் பங்கேற்காதபோதிலும், தமிழகத்தின் திருப்பூர் நகரிலிருந்து அனுப்பப்பட்ட ஆடைகள் மெல்பன் மைதானத்தை அலங்கரித்தன.

Tags : Tirupur ,Australian Open ,The Australian Open , Australia, Open Tennis, Tournament, Tirupur, Clothing
× RELATED கொரோனா வைரஸ் தொற்று பரவலில் அறிவியல்...