×

பூனைகளின் தேசம்

நன்றி குங்குமம்

ஒரு காலத்தில் தாய்வானின் ஹவ்டோங் கிராமம் குரங்குகளின் கூடாரமாக இருந்தது. ஹவ்டோங் என்றால் குரங்குகளின் குகை என்று அர்த்தம். மனிதர்கள் ஒருவர் கூட அக்கிராமத்தில் இல்லை. 1920ல் தாய்வான், ஜப்பானின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது. ஜப்பானியர்கள் ஹவ்டோங்கில் நிலக்கரி இருப்பதைக் கண்டுபிடித்தனர். பிறகு தாய்வானிலேயே அதிகளவில் நிலக்கரியை வழங்கும் ஓர் இடமாக ஹவ்டோங்மாறியது.

900 வீடுகள் அங்கே புதிதாக உருவாகி மக்கள் குடியேற ஆரம்பித்தனர். சுமார் 6 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட ஊராக உருவெடுத்தது ஹவ்டோங். 1970களில் நிலக்கரி பழைய செய்தியானது. இளைஞர்கள் வேலை தேடி கிராமத்தைவிட்டு நகரத்துக்கு இடம் பெயர்ந்தனர். அங்கிருந்த நிலக்கரித் தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

1990களில் ஹவ்டோங்கின் மக்கள் தொகை நூற்றுக்கும் குறைவாக சரிந்தது. அந்த நூறு பேரில் ஒரு பெண்மணி, தன்னார்வலர்களுடன் சேர்ந்து ஹவ்டோங்கில் இருக்கும் பூனைகளைப் பராமரிக்க ஆரம்பித்தார். மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்த வீடு, பூனைகளின் வீடாக மாறிவிட்டது!இன்று ஹவ்டோங் தெருக்களில் குறைந்தபட்சம் 200 பூனைகளையாவது பார்க்க முடியும்.

Tags : nation , A nation of cats
× RELATED படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை...