×

தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை: சென்னையில் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. தங்கம் விலை பிப்ரவரி 1ம் தேதி ரூ.31,376 ஆக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இதுவே அதிகபட்ச விலையாக இருந்தது. இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்கம் விலை அதன்பிறகு ஏறுவது கொஞ்சம் இறங்குவது என மாறி மாறி இருந்தது. இந்நிலையில் இன்று(பிப்ரவரி 6ம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.30,896க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 உயர்ந்து ரூ.3862-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.49.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.49,800 ஆக உள்ளது. தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.Tags : Chennai, gold, silver, price
× RELATED தொடர்ச்சியாக 19 நாட்கள் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை திடீர் சரிவு