×

பாம்பேகேசில் பகுதியில் பயனற்று கிடக்கும் நூலகம்

ஊட்டி: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பாம்பேகேசில் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஒரு உடற்பயிற்சி நிலையம் துவக்கப்பட்டது. இந்த பயிற்சி நிலையம் துவக்கப்பட்டு ஓரிரு நாட்கள் மட்டுமே செயல்பட்டது. அதன் பின் மூடப்பட்டது. இந்த கட்டிட வளாகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அரங்கேறும் பகுதியாக மாறியது. இதனைத்தொடர்ந்து. இந்த கட்டிடத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள வலியுறுத்தி வந்தனர்.

இதனால் இது நூலகமாக மாற்றப்பட்டது. ஆனால், அதுவும் முறையாக செயல்படவில்லை. கடந்த சில மாதங்களாக இந்த கட்டிடம் பூட்டிக்கிடக்கிறது. இதனால், மீண்டும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, இந்த கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : area ,library ,Bombaygale , Pompeace Area, Library
× RELATED வாட்டி வதைக்கும்...