×

குடியாத்தம் சாத்கர் மலையில் 4,500 லிட்டர் எரிசாராய ஊறல் அழிப்பு: மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை

வேலூர்: குடியாத்தம் சாத்கர் மலையில் பதுக்கி வைத்திருந்த 4,500 லிட்டர் எரிசாராய ஊறலை அழித்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து வேலூர் எஸ்பி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் நேற்று சாத்கர் மலைப்பகுதியில் உள்ள டங்கா பள்ளம், மாமரத்து பள்ளம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில், பாறைகளுக்கு இடையில் மற்றும் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 4,500 லிட்டர் சாராய ஊறல்களை கீழே கொட்டி அழித்தனர். மேலும், எரிசாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பேரல்கள், அடுப்பு, பானைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து எரிசாராயம் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : hill ,Gudiyatham Sadhgarh , Settlement, combustion, destruction
× RELATED சேதமான சாலையில் ஆம்புலன்ஸ் வர...