×

30 சாயப்பட்டறைகள் அகற்றம்

பள்ளிபாளையம்: சுத்திகரிப்பு நிலையம் இல்லாத சாயப்பட்டறைகளை அகற்றும் பணியில், மாசு கட்டுப்பாட்டு துறையினர் 2வது நாளாக ஈடுபட்டனர். நேற்று மேலும் 30 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டது. குமாரபாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணியினை, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 2வது நாளாக நேற்றும் மேற்கொண்டனர். முதல்நாளில் குமாரபாளையத்தில் 41 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன. இதையடுத்து 2வது நாளாக நேற்றும் இந்த பணிகள் தொடர்ந்து நடந்தது. சேலம் மாசுகட்டுப்பாட்டு வாரிய இணை ஆணையர் மதிவாணன் தலைமையில் இரண்டு அணிகள் அமைக்கப்பட்டன.

இதில் குமாரபாளையம் சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன், ஈரோடு பறக்கும்படை சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில், இரண்டு பொக்லைன் மூலம் மீதமிருந்த 16 சாயப்பட்டறைகளை இடித்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து பள்ளிபாளையம் வந்த இந்த தனிப்படையினர் களியனூர், ஆவத்திபாளையம், சில்லாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த, 14 சாயப்பட்டறைகளை பொக்லைன் மூலம் உடைத்து அப்புறப்படுத்தினர். கடந்த இரண்டு நாட்களாக அனுமதி இல்லாமல் இயங்கிவந்த 71 சாயப்பட்டறைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடைத்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

Tags : 30 Dyes, Disposal
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...