×

காந்திஜியே தமது ஆட்சியின் உயிர்மூச்சு; தமது அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது; ஜனாதிபதி உரைக்கு பிரதமர் மோடி பதிலுரை

புதுடெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். அப்போது எதிர்கட்சியினர் காந்தி வாழ்க என்று முழக்கமிட்டனர். இதற்கு காந்தி எதிர்கட்சிகளுக்கு ட்ரெய்லராக இருக்கலாம்; ஆனால் எங்களுக்கு அவர் வாழ்க்கையாக இருக்கிறார் என்று தெரிவித்தார். புதிய இந்தியாவுக்கான தொலைநோக்கு திட்டங்களை தனது உரையில் குடியரசு தலைவர் விவரித்ததாக தெரிவித்தார். காந்திஜியே தமது ஆட்சியின் உயிர்மூச்சு என்று தெரிவித்த பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்காக தமது அரசு ஓய்வின்றி உழைக்க உறுதிபூண்டுள்ளதாகவும், தமது அரசு வேகமாக செயல்பட்டால் தான் காஷ்மீருக்கு சிறப்பு தகுதி அளிக்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

தமது அரசு விரைந்து செயல்படாமல் இருந்தால் நிர்பயா கொலை குற்றவாளிகள் தண்டனை பெற்றிருக்க மாட்டார் என்றும், இந்தியாவில் தற்போது 37 கோடி பேர் வங்கி கணக்கு வைத்திருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் 13 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரசின் கொள்கைகள் தடைகற்களாக அமைந்திருந்தாக குற்றம் சாட்டினார். டெல்லியில் அங்கீகாரமின்றி இருந்த 1,700 குடியிருப்புகளுக்கு தமது அரசு அங்கீகாரம் அளித்துள்ளதாகவும், வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்கு முந்தைய ஆட்சியில் அரசியல் தடையாக இருந்தது என்று தெரிவித்தார்.


Tags : Gandhiji ,Modi ,state ,speech ,President ,Parliament , President's speech, Prime Minister Modi, Modi's reply, Parliament,
× RELATED மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற...