×

ஆந்திராவில் திறக்கப்பட்டுள்ள கியா மோட்டார்ஸ் ஆலையை தமிழகத்துக்கு மாற்ற பேச்சு என தகவல்

ஐதரபாத்: ஆந்திராவில் திறக்கப்பட்டுள்ள கியா மோட்டார்ஸ் ஆலையை தமிழகத்துக்கு மாற்ற பேச்சு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பரில் புதிய ஆலையை ஆந்திராவில் திறந்தது. கியா மோட்டார்ஸ் தொழிற்ச்சாலை 3 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. முந்தைய அரசுடன் செய்த ஒப்பந்தங்களை தற்போதையை ஜெகன் மோகன் அரசு மாற்றி அமைத்து வருகிறது. ஆந்திர அரசு தனியார் நிறுவனங்களில் 75% பணியை உள்ளூர் மக்களுக்கு அளிக்க உத்தரவிட்டது. அரசின் உத்தரவால் பல பணிகளுக்கு தேவையான ஊழியர்களை நியமிப்பது கடினமாக உள்ளது என கியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பழைய ஒப்பந்தைகளை தற்போதைய அரசு மாற்றி அமைப்பதால் ஆலையை தமிழகத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. 


Tags : Andhra Pradesh ,Kia Motors ,plant ,Tamil Nadu , Andhra, Kia Motors Plant, Tamil Nadu
× RELATED ஆந்திர மாநிலத்தில் தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ரயில் சேவை பாதிப்பு