×

அமெரிக்க செனட் சபையில் டொனால்டு ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் தோல்வி; தப்பியது அதிபர் பதவி

வாஷிங்டன்: அமெரிக்க செனட் சபையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் தோல்வியை தழுவியுள்ளது. அதிபர் ட்ரம்பை பதவி நீக்க முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்களும் செனட் சபையில் தோல்வியடைந்தன. அதிபர் டிரம்புக்கு ஆதரவாக 52 பேரும், எதிராக 48 பேரும் வாக்களித்ததால் பதவி நீக்க தீர்மானம் தோல்வியடைந்தது. இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில், அவரது மகன் உக்ரேனில் முறைகேடாக சம்பாதிப்பது குறித்து விசாரணை நடத்தும்படி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் அதிபர் டிரம்ப் போனில் பேசினார்.

இது அதிகார துஷ்பிரயோகம் என குற்றம் சாட்டி ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், அதிபர் டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றினர். செனட் சபையில் 3ல் 2 பங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். ஆனால், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், இத்தீர்மானம் தோல்வி அடைவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருந்தன. இதன் காரணமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை என சுமார் 20 நாட்களாக தீர்மானத்தை விவாதத்துக்கு அனுப்பாமல் சபாநாயகர் பெலோசி இழுத்தடித்து வந்தார்.

இந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பாமல் சபாநாயகர் பெலோசி தாமதிப்பதாக குடியரசுக் கட்சி குற்றம் சாட்டியது. பின்னர் தீர்மானம் செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மீதான விசாரணை கடந்த 29ம் தேதி செனட் சபையில் தொடங்கியது. பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறிய நிலையில், செனட் சபையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின் முடிவில், டிரம்ப்பை விடுவிக்க 52 பேரும், விடுவிக்க கூடாது என 48 பேரும் வாக்களித்துள்ளனர். இதன் மூலம், பதவி நீக்கத் தீர்மானத்தில்  இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, செனட் சபை அறிவித்துள்ளது.


Tags : US ,Senate ,Chancellor ,Donald Trump ,President , US President, Donald Trump, Failure to Repeal Resolution, US Senate
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!