×

பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் 5.16 கோடி விவசாயிகள் 3ம் தவணை பெறவில்லை : தகவல் உரிமை சட்டத்தில் தகவல்

புதுடெல்லி: ‘பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தின் கீழ் 5 கோடி விவசாயிகள் 3வது தவணையை பெறவில்லை,’ என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் விவசாயிகளுக்கு 3 தவணையாக ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் பயன் பெற்றவர்கள் விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டன. இதற்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது: பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தின் கீழ், கடந்த டிசம்பம் 2018ம் ஆண்டு முதல் நவம்பர் 2019ம் ஆண்டு வரை 9 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 7.62 கோடி பேர் அல்லது 84 சதவீதம் விவசாயிகள் முதல் தவணைத் தொகையை பெற்றுள்ளனர்.

6.5 கோடி விவசாயிகளுக்கு 2வது தவணையும் வழங்கப்பட்டுள்ளது. 3.85 கோடி பேர் 3வது தவணையை பெற்றுள்ளனர். 2.51 கோடி விவசாயிகள் 2வது தவணையையும், 5.16 கோடி விவசாயிகள் இதுவரை 3வது தவணையையும் பெறவில்லை.  டிசம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரை 4.74 கோடி விவசாயிகள் பதிவு செய்தனர். இவர்களில் 4.22 கோடி பேர் முதல் தவணையையும், 4.02 கோடி விவசாயிகள் 2வது தவணையையும், 3.8 கோடி பேர் 3வது தவணையையும் பெற்றுள்ளனர்.  இதேபோல், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை 3.08 கோடி விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ்  தங்கள் பெயரை பதிவு செய்தனர். இவர்களில் முறையே 2.66 கோடி மற்றும் 2.47 கோடி பேர் முதல் மற்றும் 2வது தவணையை பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : crore farmers ,Kisan Financing Scheme , Prime Minister's Kisan Financing Scheme, 5.16 crore Farmers Receive Third Term
× RELATED பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் 11.8...