ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் : முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: 22 கோடியே 97 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார் இது குறித்து வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்டம் - அரக்கோணம், அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 36 வகுப்பறைகளைக் கொண்ட புதிய பள்ளிக் கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், சென்னை மாவட்டம், புளியந்தோப்பு, திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டம், பதுவஞ்சேரி, கிளாம்பாக்கம் மற்றும் பாலூர், கோயம்புத்தூர் மாவட்டம், வெல்ஸ்புரம், திருநெல்வேலி மாவட்டம், நல்லம்மாள்புரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகக் கூடங்கள், பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் கழிவறை தொகுதிகள், மதுரை மாவட்டம், பரவை, தேனி மாவட்டம், வருசநாடு, தஞ்சாவூர் மாவட்டம், நடுவிக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், சுப்ரமணியபுரம், பெரம்பலூர் மாவட்டம், நெய்குப்பை, திருவண்ணாமலை மாவட்டம், கண்ணக்குருக்கை, திருநெல்வேலி மாவட்டம், பேட்டை ஆகிய இடங்களில் 7 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 7 விடுதிக் கட்டிடங்கள். திருவண்ணாமலை மாவட்டம் - ஜமுனாமரத்தூரில் 1 கோடியே 5 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலைய விடுதிக் கட்டடம், என மொத்தம் 22 கோடியே 97 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கட்டடங்களை திறந்து வைத்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் பணியில் இருக்கும் போது காலமான 21 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் 16 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கும், 5 நபர்களுக்கு தட்டச்சர் பணியிடங்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

Related Stories:

>