ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் இரண்டு தம்பதிகளுக்கு சுயமரியாதை திருமணம் : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்திட்டனர்

சென்னை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் நகர துணை அமைப்பாளரும், ஜெயராமன் - விமலா தம்பதியரின் மகனுமான ஜெயராஜூக்கும், கருணாகரன் - சகிலா தம்பதியரின் மகள் தமிழரசிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர்,  தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், காஞ்சிபுரம் நகர செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதேபோன்று, சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகியும் வடபெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மறைந்த சுப்பிரமணி- சரஸ்வதி ஆகியோரின் மகன் கமலநாதனுக்கும், மறைந்த வெங்கடேசன்- ஜெயமணி தம்பதியரின் மகள் ஜெபமணிக்கும் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த சுயமரியாதை திருமணத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

இந்த திருமண நிகழ்ச்சியில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, தலைமை பொதுக்குழு உறுப்பினர் நாராயணன், மாநில மாணவரணி செயலாளர் எழில் அரசன், துணை செயலாளர் கவி கணேசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். இத்திருமண விழாவின்போது, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்திக் கொண்டிருக்கும் கையெழுத்து இயக்கத்திற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்கள் மற்றும் அவர்களது  குடும்பத்தாரிடம் கையெழுத்து இயக்கத்திற்கான நோக்கத்தை விளக்கியதையடுத்து மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Related Stories:

>