×

குடிமராமத்து விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

சென்னை: குடிமராமத்து திட்டத்தால் ஏற்பட்டுள்ள நன்மைகள் என்ன என்பதை மக்களுக்கு விளக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுக்கும் குடிமராமத்து பணிகள் விவசாய சங்கங்கள்/பாசன சபைகள்/ ஆயக்கட்டுதாரர்களின் உதவியுடன் செய்யப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டத்தின் சிறப்புகள் குறித்தும், அதன் மூலம் ஏற்பட்டுள்ள பயன்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் குடிமராமத்து திட்டம் தொடர்பாக குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த குறும்படம் சுமார் 5.31 நிமிடங்கள் ஓடுகிறது. ஏரிகளை பலப்படுத்துதல், தூர்வாருதல், நீர்வரத்து வாய்க்கால் தூர்வாருதல்போன்ற அனைத்து திரையரங்குகள் மூலமாகவும், செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் அரசு சாதனைகளை விளக்க அமைக்கப்பட்டுள்ள  வாகனங்களிலும் ஒளிபரப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Citizen Awareness, Short Film Release
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...