×

அதிமுகவுடன் கூட்டணி நன்றாக உள்ளது : பிரேமலதா திடீர் பல்டி

சென்னை: கூட்டணி தர்மத்தை பின்பற்றாவிட்டால் மாற்று அணி ஆகிடுவிடும். எனவே எங்களுக்கும் அதிமுகவுக்கும் இடையே கூட்டணி நன்றாக உள்ளது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசினார். கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், தேமுதிக கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்று விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவிற்கு, தேமுதிக நகர செயலாளர் ஏ.ஜெயவேலு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதாரத்தை உயர்த்துவதாக இல்லை. எல்ஐசியை தனியார் மயமாக்குவதை மறுபரிசீலனை செய்யவேண்டும். வேலைவாய்ப்பு, நதிகள் இணைப்பு, சாலை மேம்பாடு குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. தனிநபர் பொருளாதாரம் உயர்ந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் உயரும். கூட்டணி தர்மத்தை பின்பற்றாவிட்டால் மாற்று அணி என ஆகிவிடும். அதிமுகவுடன் கூட்டணி நன்றாக உள்ளது. 2021ல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Tags : Alliance ,AIADMK , Alliance with AIADMK , good, Premalada
× RELATED தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம்: மம்தா விளக்கம்