×

இலவச லேப்டாப் வழங்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்: ராயபுரத்தில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காததை கண்டித்து தனியார் பள்ளி மாணவர்கள்  நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை ராயபுரம் சூர்யநாராயணசெட்டி தெருவில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பள்ளி எதிரே பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்கும்படியும் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்ைல என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை லேப்டாப் வழங்காதது, கழிவுநீர் தேக்கம் ஆகியவற்றை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து ராயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு எதுவும் ஏற்படாததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து 3 மாணவர்களை போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Tags : School students ,laptop School students , Free laptop, school students, road pickup
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்