×

சிஏஏ.க்கு எதிராக தீர்மானம்: மபி அமைச்சரவை ஒப்புதல்

போபால்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும்  போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த  சட்டத்தை திருப்பப் பெற வலியுறுத்தி, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் 4 மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் மத்தியப்  பிரதேசத்திலும் இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருகிறது. இம்மாநில முதல்வர் கமல்நாத் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இம்மசோதா விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.



Tags : CAA ,Mabi ,Cabinet , CAA, MP cabinet
× RELATED சிஏஏ அமல்படுத்தியதை கண்டித்து திருவாரூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!!