×

வேலூர், சென்னை, கோவை உள்ளிட்ட 5 சிறைகளில் பெட்ரோல் பங்க்குகளில் பணியாற்றும் கைதிகளுக்கு சம்பளம் உயர்வு

வேலூர்: வேலூர், சென்னை, கோவை உள்ளிட்ட 5 சிறைகளில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க்குகளில் நன்னடத்தை கைதிகளுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. சிறை கைதிகள் சிறை வாழ்விலிருந்து சமுதாய வாழ்வுக்கு மதிப்புமிக்க முறையில் அடியெடுத்து வைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் கைதிகளுக்கு, சிறைத்துறை மூலம் பல்வேறு தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கிடையில், தமிழக சிறைத்துறையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து தமிழகம் முழுவதும் 11 இடங்களில் சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் முதல்கட்டமாக புழல், வேலூர், புதுக்கோட்டை, கோவை, பாளையங்கோட்டை ஆகிய 5 இடங்களில் 10 கோடி முதலீட்டில் பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. மேலும், பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் வருவாய் விவரங்களை 6 மணி நேரத்திற்கு ஒருமுறை சிறைத்துறை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு தனியாக அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க்குகளில் பணியாற்றும் கைதிகளுக்கு நாள்தோறும் 180 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கடந்த ஜனவரி மாதம் முதல் கைதிகளுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.  இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் வேலூர், புழல், கோவை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை ஆகிய 5 பெட்ரோல் பங்க்குகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட நன்னடத்தை கைதிகளுக்கு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு 180 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இதில், 20 சதவீதம் கைதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, மீதம் 144 கைதிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, பெட்ரோல் பங்க்குகளில் பணியாற்றும் கைதிகளுக்கு நாளொன்று 20 சம்பளம் உயர்த்தி 200 வழங்கப்படுகிறது. இதில் 20 சதவீதம் பிடிப்பு போக 160 வழங்கப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி சம்பளம் உயர்த்தப்பட்டு, புதிய சம்பளம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : prisoners ,prisons ,Chennai ,Coimbatore ,Vellore , Salary,prisoners working,petrol stocks,five prisons including Vellore, Chennai and Coimbatore
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்