×

கவர்னர் தொல்லையால் தூக்கமில்லை : நாராயணசாமி வேதனை

புதுச்சேரி: ‘‘கவர்னர் தொல்லையால் இரவில் தூக்கம் வருவதில்லை’’ என்று முதல்வர் நாராயணசாமி வேதனையுடன் கூறினார். புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் `நவீன கால கற்பித்தலின் பரிணாமம், சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தியல் கூட்டம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்து பேசியதாவது: புதுவையில் 2016ம் ஆண்டில் புதிய தொழிற்கொள்கையை கொண்டுவந்தோம். அதுமட்டுமில்லாமல் பெட்ரோல், டீசல் வாகனங்களால் மாசு ஏற்படுவதை தடுக்க, மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களை இயக்குவதற்கு சலுகை வழங்கவும் நடவடிக்கை எடுத்தோம். தொழில் முனைவோர்களுக்காக புதிய ஸ்டார்ட் அப் கொள்கையும் வெளியிட்டோம். இதனால் 500 தொழிற்சாலைகள் சென்னையில் இருந்து வரவுள்ளது.

ஆனால் கவர்னர் கொடுக்கும் தொல்லையால் இரவில் தூக்கம் வருவதில்லை. எந்த வேலையும் நடக்கக்கூடாது என்று தடுக்கும் ஒரு கூட்டம் உள்ளது. அதிகாரிகளையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன். டெல்லி மற்றும் கவர்னர் தொல்லையை மீறி சிறப்பான நிர்வாகம் என்றும் மனிதவள மேம்பாட்டிற்கும் விருது வாங்கியுள்ளோம். கைகள் கட்டப்பட்டு உள்ள நிலையிலேயே இவ்வளவு என்றால், சுதந்திரமாக விடப்பட்டிருந்தால் எப்படி முன்னேறியிருக்கலாம். புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வாய்ப்பும், சூழல் உள்ளது. நிதி தேவைப்படுகிறது. நமக்கு தர வேண்டிய நிதியை கூட 3 ஆண்டுகளாக தரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Narayanaswamy ,Governor , Narayanaswamy , not suffering from Governor's obsession, Narayanaswamy
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...