×

முக்கிய பிரமுகர்கள் வராத நிலையில் காவி வேட்டியுடன் பங்கேற்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தஞ்சை:  தஞ்சை பெரிய கோயிலுக்கு செல்பவர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்பது காலம் காலமாக நிலவும் ஐதீகம். இதனால்தான், உள்ளூர் அமைச்சர் துரைக்கண்ணு, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் அனைவரும் சென்னையிலேயே இருந்து கொண்டனர்.அதேநேரத்தில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று நடந்த குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டார். காவி வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து வந்த அவர், விவிஐபி கேலரி 1ல் அமர்ந்து குடமுழுக்கு விழாவை கண்டுகளித்தார்.

கோயிலுக்கு வெள்ளை வேட்டி, பட்டுவேட்டி, கோட் சூட் அணிந்து வந்தால்தான் பதவிக்கு ஆபத்து. முற்றும் துறந்த துறவிபோல காவி வேட்டி கட்டி வந்தால் அந்த ஐதீகம் பொருந்தாது என்று அவருக்கு கூறப்பட்டதாம். அதனால்தான் காவி வேட்டியுடன் வந்ததாக அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கேட்டபோது, ‘‘நான் இதுவரை 7 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளேன். இறைவனை வணங்காத நாள்தான் எனக்கு கெட்ட நாள். தஞ்சை குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வதில் என்ன பயம் இருக்கிறது.? எந்த குடமுழுக்கு விழாவுக்கும் நான் காவி வேட்டி கட்டிதான் செல்வேன். தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ossimaniyan ,OS Manian ,event ,hunt , C OS Manian, absence , prominent figures
× RELATED நான் எம்ஜிஆர் ரசிகன், ஆனால் கலைஞரின்...