×

காவி வேட்டியுடன் வந்தது ஏன்?: அமைச்சர் ஓ.எஸ். மணியன் விளக்கம்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் காவி வேட்டியுடன் கலந்துகொண்டது ஏன் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலுக்கு செல்பவர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்பது ஐதீகம். இதனால் தானோ என்னவோ, உள்ளூர் அமைச்சர் துரைக்கண்ணு, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டார்.

காவி வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து வந்த அவர் விவிஐபி கேலரி 1ல் அமர்ந்து குடமுழுக்கு விழாவை கண்டுகளித்தார். கோயிலுக்கு வெள்ளை வேட்டி, பட்டுவேட்டி, கோட் சூட் அணிந்து வந்தால் தான் பதவிக்கு ஆபத்து, முற்றும் துறந்த துறவி போல காவி வேட்டி கட்டி வந்தால் அந்த ஐதீகம் பொருந்தாது என்று அவருக்கு சொல்லப்பட்டதாம். அதனால் தான் காவி வேட்டி கட்டி வந்ததாக அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

இதுபற்றி அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறுகையில், ‘’இதுவரை 7 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளேன். இறைவனை வணங்காத நாள் தான் எனக்கு கெட்ட நாள். தஞ்சை குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்வதில் என்ன பயம் இருக்கிறது.? எந்த குடமுழுக்கு விழாவுக்கும் நான் காவி வேட்டி கட்டி தான் செல்வேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, குடமுழுக்கு சிறப்பாக நடந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

Tags : Kavi ,Minister O.S. ,OS Maniyan , Why Kavi came up with the hunt: Minister O.S. Maniyan
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து...