×

புதுக்கோட்டையில் சர்வரில் பிரச்னையால் தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான நெல்மூட்டைகள்: பாடுபட்டு விளைவித்த நெல்லுடன் பரிதவிக்கும் விவசாயிகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டும், எங்குமே முறையான கொள்முதல் நடக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.  இதனால் மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி இடக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 62 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. ஆனால் அவற்றில் 20 கொள்முதல் நிலையங்கள்கூட இதுவரை சரியாக இயங்கவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும்.  இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், ஜனவரி மாதமே, அறுவடை செய்து கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள்கூட, இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். கொள்முதல் நடக்கும் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன.

இதனால், ஒவ்வொரு கொள்முதல் மையத்திலும் பல்லாயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. நெல் கொள்முதல் செய்வதில் முன்னேற்பாடுகள் இல்லாமல் அலட்சியமாக அலுவலர்கள் நடந்து கொள்வதால் வியர்வை சிந்தி உழைத்து, விளைவித்த நெல்லை உரிய விலைக்கு விற்க முடியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  இதுபற்றி, மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது,  62 கொள்முதல் நிலையங்களிலும் வருவாய்த்துறை அலுவலர்களை அனுப்பி ஆய்வு செய்யப்படும் என்றார். மேலும் இதுகுறித்து, நுகர்பொருள் வாணிப அதிகாரிகளிடம் கேட்டபோது,  பணியாளர்கள் பற்றாக்குறை இருந்ததாகவும், தற்போது, 38 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சர்வரில் ஏற்பட்ட பிரச்சனையால், 2 நாட்களாக கொள்முதல்  நடக்கவில்லை என கூறிய அதிகாரிகள் விரைவில் நிலைமை சரிசெய்யப்படும் என தெரிவித்தனர்.

Tags : Millions ,Pudukkottai , Pudukkottai, server, problem, rice paddies, farmers
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...