×

பிளாஸ்டிக் மீன்

நன்றி குங்குமம் முத்தாரம்

சமீபத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இரண்டு ஆக்டோபஸ்களையும் ஒரு மீனையும் பிடித்தார். அந்த மீனின் வயிற்றுப் பகுதி விநோதமான தோற்றத்தைக் கொண்டிருக்க, அது மீனவரை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த மீனின் வயிற்றுப் பகுதியைக் கிழித்துப் பார்த்தால் கொத்து கொத்தாக பிளாஸ்டிக்குகள். இந்த சோகமான நிகழ்வை வீடியோவாக்கி யாஸ்மின் ஸ்காட் என்பவர் இணையத்தில் தட்டிவிட, நான்கு மணி நேரத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டனர்.

ஒரு நிமிடம் 40 நொடிகள் ஓடும் அந்த வீடியோ இப்போது பிளாஸ்டிக்குக்கு எதிரான பிரச்சார அடையாளமாகவே மாறிவிட்டது. அவ்வளவு பிளாஸ்டிக்குகள் வயிற்றுக்குள் இருந்தும் அந்த மீன் உயிருடன் இருந்திருக்கிறது. அத்துடன் அவரிடம் பிடிபட்ட தொண்ணூறு சதவீதத்துக்கும் அதிகமான மீன்களின் வயிற்றுக்குள்ளும் பிளாஸ்டிக்குகள் இருந்திருக்கின்றன. இவ்வளவு சிறிய மீனுக்குள்ளேயே இத்தனை பிளாஸ்டிக்குகள் என்றால் திமிங்கலத்தின் வயிற்றுக்குள் என்னென்ன இருக்குமோ!


Tags : Plastic fish
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்