தரங்கம்பாடி கடற்கரையை சுத்தம் செய்த டென்மார்க் மாணவ, மாணவிகள்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி பகுதிக்கு சுற்றுலா வந்த டென்மார் மாணவர்கள், கடற்கரையை சுத்தம் செய்தனர். டென்மார்க் நாட்டில் உள்ள வெஸ்ட் பைன் எப்டர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மேரிகில்ட் மற்றும் 7 ஆசிரியர்கள், 35 மாணவ, மாணவிகள் டென்மார்க் நாட்டில் உள்ள தரங்கம்பாடி நலச்சங்கத்தின் தலைவர் பவுல்பீட்டரசன் தலைமையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வந்துள்ளனர். அவர்கள் தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து வெள்ளையடித்தனர். தரங்கம்பாடி பகுதியில் உள்ள பள்ளிகள், கோயில்களுக்கு சென்று தமிழர் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்களை அறிந்து கொண்டனர்.

மாணவ, மாணவிகள் தங்கள் நாட்டிற்கு திரும்பும் முன் தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள குப்பை கூளங்களை சுத்தம் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்து அந்த பணியில் ஈடுபட்டனர். அதன் பின் மனநிறைவோடு தங்கள் நாட்டிற்கு திரும்பினர். இது குறித்து மாணவ, மாணவிகளை அழைத்து வந்த பவுல்பீட்டரசன் கூறியதாவது, டென்மார்க் நாட்டில் கடற்கரைகள் சுத்தமாக இருக்கும். அதே போல் தரங்கம்பாடி கடற்கரையை சுத்தப்படுத்த வேண்டுமென்று முழு மனதோடு அதில் ஈடுபட்டு சுத்தப்படுத்தினார்கள். ஆந்த மனநிறைவோடு அவர்கள் நேற்று தங்கள் நாட்டிற்கு திரும்பினர் என்று கூறினார்.

Related Stories: