×

தங்களுக்கு இந்தி இந்தியா வேண்டுமா?..ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா?..குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வைகோ பேச்சு

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக 11 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக 4 மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கி இருப்பது இப்போதுதான் என்று சுட்டிக்காட்டிய அவர், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடு முழுவதும் பேரணிகளையும் நடத்தி வருகின்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மக்கள் கருத்தை திரட்டி வருவதாக தெரிவித்தார், ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பது தமிழகத்துக்கு எதிரானது. தமிழ், கலாச்சாரம், பண்பாட்டை அழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மாநிலங்களவையில் குற்றம்சாட்டினார்.

மேலும், பிரதமரும் அமைச்சரும் பேசும்போது திருக்குறளையும் புறநானுற்றையும் மேற்கோள்காட்டி தமிழர்களை ஏமாற்ற முடியாது, தமிழகத்தில் மத்திய அரசு மறைமுக இந்தி திணிப்பில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு இந்தி இந்தியா வேண்டுமா? ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா? என்று மாநிலங்களவையில் வைகோ கேள்வி எழுப்பினார். குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இலங்கையில் தமிழின அழிப்பில் ஈடுபட்ட ராஜபக்க்ஷேவை இந்தியாவுக்கு அழைக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

Tags : India ,talks ,Vaiko , Citizenship Law Amendment, Against, Vaiko, Speech
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...