×

கண்களை கட்டிக்கொண்டு படித்து, கணக்கு போட்டு அசத்தும் மாணவி: யோகா மூலம் திறமையை வளர்த்ததாக பெருமிதம்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கடத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி வாசுமதி. 6ம் வகுப்பு  வரை படிப்பில் பின்தங்கிய நிலையில் இருந்த வாசுமதி, தன் தந்தையான ராஜ்குமாரிடம் படிக்கும் விஷயங்கள் மறந்து விடுவதாக தெரிவித்துள்ளார். இதனால் வாசுமதியின் வகுப்பு ஆசிரியர்களின் ஆலோசனைப்படி வாசுமதியை ராஜ்குமார் யோகா பயிற்சிக்கு சேர்த்துள்ளார். ஆரம்பத்தில் அங்கும் மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் திணறிய மாணவி வாசுமதி,  ஓரிரு மாதங்களில் யோகாவை கற்றுக்கொண்டார். அப்போது மனதை ஒருமுகப்படுத்தினால் கண்ணைக்கட்டிக்கொண்டு படிப்பது, கணிதம் போடுவது உள்ளிட்ட எந்த பணிகளையும் செய்யலாம் என பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து வாசுமதி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்களை கட்டிக்கொண்டு படிக்கவும், எழுதவும், பந்து, பிளாஸ்டிக் பாட்டில் போன்றவற்றின் வண்ணங்களை கண்டறியவும், எந்த வகையான கடிகாரத்தை கொடுத்தாலும் அதை தடவி பார்த்தே நேரத்தை கூறவும், எழுத்துகளை தடவியும், முகர்ந்தும் பார்த்து படிக்கவும், விடையளிக்கவும் பயிற்சி பெற்றார். 2 வருடத்தில் இதில் அவர் முழுமையாக பயிற்சியை பெற்றார். வாசுமதி தற்போது எந்த பாடப்புத்தகத்தில் இருந்து எந்த பக்கத்தை கொடுத்தாலும் அதில் உள்ள எழுத்துகளை தடவி பார்த்தும், முகர்ந்து பார்த்தும் படித்து அசத்தி வருகிறார். அதே போன்று எந்த கணிதத்திற்கான விடையையும் கண்களை கட்டிக்கொண்டே எழுதுகிறார். அதேபோன்று கலர் க்யூப்பை கொடுத்தால் ஒரே நிமிடத்தில் ஒரே மாதிரி கலரை சேர்த்து விடுகிறார்.  யோகா கற்றதன் மூலம் படிப்பில் பள்ளியின் முதன்மை மாணவியாக விளங்கி வருவதாகவும், கோபம் குறைந்து அனைத்து மாணவ-மாணவிகளிடமும் அன்புடன் பழகி வருவதாகவும் தெரிவித்த மாணவி வாசுமதி இதற்கு  பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமே காரணம் என்றார்.

Tags : Eyeshadow Student: Proud ,Asante , Eye, Account, Student, Yoga
× RELATED தேனி பழைய பேருந்து நிலையத்தில்...