கொரோனா வைரஸ் எதிரொலி: சீன மக்கள் வீடுகளில் முடங்கியதால் செல்போன், கம்ப்யூட்டர் உற்பத்தி கடும் சரிவு

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் தயாரிப்பில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் உற்பத்திக்கான முக்கிய கேந்திரமாக விளங்கும் சீனாவில், மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மருந்துகள் மற்றும் உணவு பொருட்களை வாங்க குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் உற்பத்தி கடும் சரிவை சந்தித்துள்ளன. சீனாவில் முக்கிய நகரங்கள் பிப்ரவரி 9ம் தேதி வரை அடைக்கப்பட்டால் அங்கிருந்து இந்தியாவுக்கு செல்போன்கள் இறக்குமதி செய்வது 50 சதவீதம் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் உற்பத்தி 20 சதவீதம் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

POCO செல்போன்கள், ஒரு மாதத்திற்கு மட்டுமே இருப்பில் உள்ளன. இதேபோல் சியோமி, ஹூவேய், விவோ ஆகிய பிராண்டுகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிகிறது. மாருதி, மகிந்த்ரா, டொயோட்டோ போன்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தியும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே உலகின் 5வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், தென்கொரியாவில் தனது உற்பத்தியை முற்றிலும் நிறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 24,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: